எங்களைப் பற்றிய அறிமுகம்
எல்லாம் வல்ல இறைவனின் திருவருளாலும், நடமாடும் தெய்வமாம் காஞ்சி மஹாமுனி, ச்ருங்கேரி ஆச்சார்யாளின் அனுக்ரஹதினாலும் ஐயப்ப வழிபாட்டில் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்தவர் எங்கள் குருசாமி பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மா அவர்கள். அவர் கலிகாலத்திற்கு உகந்தவாறு ஐயப்பன் என்னும் சாஸ்தாவின் எட்டுவித அவதாரங்களை வடிவமைத்து ஐயப்பனின் பதமலர்களை அடைந்தார். அவரின் முயற்சிகளை திருவினையாக்க, உலகத்திலேயே முதன் முறையாக்க, ஐயப்பன் வழிபாட்டில் எவரும் நினைத்தும் பார்க்காத வண்ணம், சாஸ்தாவின் எட்டுவித அபூர்வ நிலைகளை கொண்ட நூதன ஆலயம் ஒன்று அமைக்க முயற்சிகள் எடுத்துக்கொண்டு வருகின்றோம்.
இத்திருக்கோவில், திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டில், நாங்கள் கட்டிக் கொண்டு வருகிறோம்.18 படிகள் மேல் ஐயப்பன் (மற்றும்) பூர்ணா புஷ்கலா சமேத தர்ம சாஸ்தா சன்னதி அமைய உள்ளது. இதனை சுற்றி மற்ற சன்னதிகள் தரை மட்ட அளவில் வந்துக்கொண்டு இருக்கின்றது
உலகிலேயே அஷ்ட சாஸ்தாகளுக்கு இது வரை கோவில் எங்கும் இல்லை. இந்த கோவில் திருப்பணியை எல்லாம் வல்ல இறைவனையும் , ஆன்மீக அன்பர்களையும், உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் தோள் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் துடங்கி உள்ளோம்.
நமது குருசுவாமிகள் 1970-களில் இதே நோக்கத்துடன் “ஸ்ரீ ஐயப்ப பஜனை சங்கம்” என்ற ஆன்மீக அமைப்பைத் தொடங்கினார். சாஸ்தா திருக்கல்யாணம் தொடர்பான கட்டுரைகள், சாஸ்தா ஸ்லோகங்கள், பாடல்கள், பிற நிகழ்வுகள், சாஸ்தா பற்றிய வேறு ஏதேனும் சுவாரஸ்யமான கட்டுரைகளை விரைவில் வெளியிட எண்ணுகிறோம்.