எங்கள் குருநாதர் வில்லிவாக்கம் விஸ்வநாத சர்மா
* சாஸ்தா ஸஹஸ்ரநாம பாஷியம் இவரது ஊக்கம்/ஒருங்கிணைப்பில் ஐயப்ப அன்பர்களுக்கு (1971) அறிமுகம் செய்யப்பட்டது. ஐயப்ப வழிபாட்டில் அதுவரை சாஸ்தா சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் இல்லை
* கேரளா (ம) தமிழ்நாட்டில் புராதனமான சாஸ்தா,ஐயனார் கோவில்கள் நேரில் சென்று ஸ்தல வரலாறு பற்றி ஆராய்ச்சி செய்து சாஸ்தா மஹாத்மியம் என்ற மாத தொடரில் ஆன்மீக உலகுக்கு அளித்தவர் (10 Years Monthly Magazine)
* தனது சாஸ்தா பற்றிய ஆராய்ச்சியின் பலனை சாஸ்த்ரு சப்தாஹம் என்ற வடிவில் 7 நாட்கள் தொடர் உபன்யாசம் மூலம் ஆன்மீக உலகிற்கு பல இடங்களில் அளித்துள்ளார்
* சாஸ்தா திருக்கல்யாணம் தொகுத்து, இயற்றி பஜனை சம்பிரதாயத்தில் உருவாக்கியவர்
* சாஸ்த்ரு அஷ்டபதி (கீத கோவிந்தம் அஷ்டபதி தழுவி) இயற்றி உருவாக்கியவர்
*காஞ்சி மடத்துக்கு மிக நெருக்கமாக செயல்பட்டு வந்தார், ஶ்ரிங்கேரி ஆச்சாரியார் மற்றும் இதர மடாதிபதிகள் நற்பெயர் எடுத்திருந்தவர்.
* MN Nambiar, கம்பங்குடி குருஸ்வாமிகள், பந்தள ராஜா போன்ற சக கால குருஸ்வாமிகள் & ஐயப்ப வழிபாட்டு சான்றோர்கள் கூட இணைந்து ஐயப்ப மேளா(1990-2000) போன்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் 2009 நடத்தியுள்ளார்.
* மகர ஜோதி தெரியும் இடமான பொன்னம்பல மேட்டில் ஐயனார் விக்ரஹம் பிரதிஷ்டை செய்தவர்
* ஐயன் திருவடிப்பா (கந்த சஷ்டி தழுவி) உருவாக்கியவர்
* உத்திர உபவாசம் 1990 களில் அறிமுகம் செய்தவர்
* கவனிக்கப்படாத ஐயனார் கோவில்கள் பலவற்றை புனரமைத்து மீண்டும் இயங்க செய்தார்
சுருக்கமாக சொல்ல போனால் ஐயப்பன் வழிபாட்டிற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
தமிழ் நாடு வங்கியில் மிக உயரிய பதவியில் இருந்து நடத்தினார். தனது மாத வருமானத்தில் பெரிய பங்கு ஐயப்ப வழிபாட்டிற்கு செலவழித்து இவை அனைத்தையும் செய்தார்
மேலும் விவரங்களுக்கு: https://t.ly/EoQCp
எங்கள் குருநாதரின் லட்சியமாக கருதிய PROJECT பற்றி அறிய: https://t.ly/-EL5A